வேலூர் கோட்டையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஜெயசீலன் 15-வது பட்டாலியன் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.;
வேலூர் கோட்டையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போலீஸ்காரர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் 15-வது பட்டாலியன் அலுவலக கண்காணிப்பாளராக (அமைச்சுப்பணி) பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் ஜெயசீலன் வேலூர் கோட்டையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜெயசீலனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.