தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு ஈர்க்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபியில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்த தகவல் தொழில்நுட்ப அணி தமிழகம் முழுவதும் தி.மு.க.வின் கொள்கை, கோட்பாடுகளை, மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு ஈர்க்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் போதிய இடவசதி கிடைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காத அளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.