பிரளய் ரக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

பிரளய் ஏவுகணை என்பது போர்க்கள பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்;

Update:2025-07-29 15:37 IST

புவனேஷ்வர்,

இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி ஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த  ஆயுதங்கள்  மற்றும் ஏவுகணைககளை  பரிசோதனை செய்யும் பணிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, பிரளய் ('PRALAY') ஏவுகணை சோதித்து பார்க்கபட்டது.

பிரளய் ஏவுகணை என்பது ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. 150 முதல் 500 கிமீ தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்த பிரளய் ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்