"செந்தில் பாலாஜியை தவிர யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர்?" சுப்ரீம் கோர்ட்டு நறுக் கேள்விகள்...

2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 பேரையும் விசாரணை செய்தால், அமைச்சரின் வாழ்நாள் முழுவதும் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வராது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.;

Update:2025-07-29 16:55 IST

புதுடெல்லி,

போக்குவரத்து துறையில் வேலைக்கு பணம் பெற்ற விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.

போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில் பாலாஜியை தவிர, இடைத்தரகர்கள், தரகர்கள் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர்? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. பணம் பெற்றுக்கொண்டு நியமன ஆணை வழங்கிய அதிகாரிகள் யார்? என தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

ஒவ்வொரு வழக்கிலும் 900, 1000 பேர் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை இருந்தால், வழக்கு விசாரணை எப்போது முடிவடையும்? இப்படியே போனால், எத்தனை ஆண்டுகளானாலும் இந்த வழக்கு முடியப்போவதில்லை? என கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

லஞ்சம் கொடுத்தவர்கள் என்று அழைக்கப்படும் ஏழைகளையும், குற்றம்சாட்டப்பட்ட 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 பேரையும் விசாரணை செய்வது கடினம். 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 பேரையும் விசாரணை செய்தால், அமைச்சரின் வாழ்நாள் முழுவதும் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வராது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட மேற்கூறிய நபர்களை சிக்க வைப்பதே உங்கள் முயற்சியாக உள்ளது. இது System மீதான ஒரு மோசடி என நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்