எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுக்கு பாலியல் தொல்லை - உயர் அதிகாரி கைது

பெண் உதவியாளர் பணியில் இருந்தபோது அவரை தனி அறைக்கு அழைத்த உயர் அதிகாரி, நர்சிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.;

Update:2025-07-30 02:06 IST

புவனேஸ்வரம்,

ஒடிசா மாநிலம் புவனேஸ் வரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. அங்கு நானு ராம் சவுத்ரி என்பவர் நர்சிங் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு கீழ் பணியாற்றும் நர்சிங் பெண் உதவியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இரவில் பெண் உதவியாளர் பணியில் இருந்தபோது அவரை தனி அறைக்கு அழைத்த நானுராம், நர்சிடம் தவறாக நடந்து கொண்டார். இதை அறிந்த சக பெண் பணியாளர்கள் நேற்று முன்தினம் காலை மருத்துவமனை வாசலில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து நர்சிங் ஆண் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்