ஆந்திராவில் 74 சதவீத அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்
மொத்தம் 74 சதவீத அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் கிடைக்கும்.;
ஐதராபாத்,
ஆந்திராவில் ஆகஸ்டு 15-ந்தேதி முதல் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் துவாரகை திருமலை ராவ் கூறியதாவது:-
"பெண்கள் இலவச பஸ் பயணத்திற்க்காக ஏற்கனவே 750 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் 3,500 புதிய பஸ்கள் இயக்கபட உள்ளது. மொத்தம் 74 சதவீத அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் கிடைக்கும். அடுத்த 2 மாதங்களில் ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் குடிநீர் வசதிகள், நாற்காலிகள் மற்றும் மின்விசிறிகள் நிறுவப்படும். பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கிராமப்புற பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் பதவி உயர்வு பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.