8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட்; அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹால்டிக்கெட் இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.;
கோப்பு படம்
சென்னை, ஆக.10-
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வை எழுத தேர்வுத் துறையின் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை (11-ந்தேதி) பிற்பகல் முதல் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் ஹால்டிக்கெட் என்ற வாசகத்தை ‘கிளிக்' செய்தால் ‘ஈ.எஸ்.எல்.சி. ஆகஸ்டு 2025 எக்சாமினேசன் - கேன்டிடேட் ஹால்டிக்கெட் டவுன்லோடு' என்ற தலைப்பின்கீழ் உள்ள ‘டவுன்லோடு ஹால்டிக்கெட்' என்ற வாசகத்தை ‘கிளிக்' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் ஹால்டிக்கெட் திரையில் தோன்றும். அதனை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால்டிக்கெட் இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.