இஸ்ரோவில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
பெங்களூர்,
இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோவில் காலியாக உள்ள டிரைவர், தொழில்நுட்ப உதவியாளர், டெக்னிஷீயன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
பணியிடங்கள் எண்ணிக்கை:
தொழில்நுட்ப உதவியாளர் (மெக்கானிக்கல்) - 11,
தொழில்நுட்ப உதவியாளர் (எலக்ட்ரானிக்ஸ்) - 01
துணை அதிகாரி - 01
டெக்னிஷீயன் (டர்னர்) - 01
டெக்னிஷீயன் (பிட்டர்) - 04
டெக்னிஷீயன் - 01
கனரக வாகன ஓட்டுநர் - 02
இலகுரக வாகன ஓட்டுநர் - 02
என மொத்தம் 23 பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணிக்கு உரிய ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பது அவசியம்.
சம்பளம்: அதிகபட்சமாக டெக்னிஷீயன் பணிக்கு ரூ 21,700/- – 69,100 வரை வழங்கப்படும், கனரக டிரைவர் பணிக்கு ரூ.63,200 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.500 திருப்பி அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.08.2025
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.lpsc.gov.in/docs/01-2025 Detailed.pdf