இளநிலை மருத்துவப் படிப்பு - முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது.;

Update:2025-08-18 21:56 IST

சென்னை,

தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. அவ்வாறு கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் தகுதியானவர்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன.

அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் 7,513 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 2,004 சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள இடங்கள் மற்றும் இடஒதுக்கீட்டில் இடத்தை பெற்று கல்லூரிகளில் சேராத இடங்களும் 2-வது சுற்று கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்