விமான நிலையங்களில் பணி செய்ய ஆசையா? வந்தது அறிவிப்பு

தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update:2025-08-19 08:58 IST

AI Image for representation

சென்னை,

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:

பணி நிறுவனம்: இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ.)

காலி பணி இடம்: 976

பதவி பெயர்: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஆர்க்கிடெக்சர்-11, சிவில்-199, எலெக்ட்ரிக்கல்-208, எலெக்ட்ரானிக்ஸ்-527, ஐ.டி.-31)

கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ. மற்றும் கேட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்

வயது: 27-9-2025 அன்றைய தேதிப்படி 27 வயதுக்குட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு (மாற்றுத்திறனாளிகள் உள்பட).

தேர்வு முறை: 2023, 2024, 2025-ம் ஆண்டு கேட் தேர்வு மதிப்பெண், நேர்காணல், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-9-2025

இணையதள முகவரி: ttps://www.aai.aero/

Tags:    

மேலும் செய்திகள்