ஊர்க்காவல் படை பணிக்கு மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்; சென்னை போலீசார் அழைப்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்க நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.;

Update:2025-08-19 09:12 IST

சென்னை,

சென்னை போலீஸ்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர போலீஸ்துறையின் கடலோர காவல் படையின் ஊர்க்காவல் படைக்கு மீனவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த பணிக்கு விண்ணப்பிப்போர், எவ்வித குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும், சென்னை போலீஸ்துறை எல்லைக்குள், மெரீனா கடற்கரை போலீஸ் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. சுற்றளளவில் வசிப்பவராக இருக்க வேண்டும், மீன்வளத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

18 வயது மேற்பட்டவராகவும், 50 வயதுக்கு உட்பட்டராகவும் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், தவறியராகவும் இருக்கலாம். தேர்ச்சி செய்யப்படும் இளைஞர்களுக்கு, 45 நாள்கள் தினமும் ஒரு மணி நேரம் பயற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள், கடலோர காவல் பாதுகாப்பு படையுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கு மெரீனா கடற்கரை காவல் நிலையத்துக்கு அனுப்பப்படுவார்கள். பணியில் சேர்பவருக்கு ரோந்து பணிக்கு தினமும் ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் நேரிலோ, அஞ்சல் மூலமாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்துக்கு அனுப்பலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்