கூட்டுறவுத்துறையில் 2,000 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும்.;
சென்னை,
கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 2 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்திய குடியுரிமையுடைய தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
https://www.drbchn.in என்ற வெப்சைட் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 157 பணியிடங்கள், வேலூரில் 41 பணியிடங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 பணியிடங்கள், மதுரை 35 பணியிடங்கள் உள்ளிட்ட 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம்: ரூ. 500, எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ. 250 கட்டனம் ஆகும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 12-ம் தேதி எழுத்து தேர்வு, அக்டோபர் 27-ல் முடிவுகள் வெளியீடு, நவம்பர் 12 முதல் 14 வரை நேர்காணல் நடத்தி, இறுதி முடிவுகளை நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும். அதிகாரபூர்வ தகவல்களை உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கவும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.drbkpm.in/