குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண் பாலியல் வன்கொடுமை

குளிர்பானத்தை வாங்கி குடித்த அந்த பெண் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார்.;

Update:2025-07-22 05:08 IST

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள ராமகே நகரை சேர்ந்தவர் முகமது சுல்தான் (வயது 45). இவர், திருவாரூர் அருகே மணிகண்டியில் தனக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அவரது வயலில் சுமார் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியாக வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த முகமது சுல்தான், அந்தப் பெண்ணுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார்.

அதனை வாங்கி குடித்த அந்த பெண் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். இதையடுத்து மயங்கி விழுந்த அந்த பெண்ணை, முகமது சுல்தான் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது சுல்தானை கைது செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்