சமூக வலைத்தளத்தில் அவதூறு: திமுக உறுப்பினர் வைஷ்ணவி போலீஸ் கமிஷனரிடம் புகார்

சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக திமுக உறுப்பினர் வைஷ்ணவி போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.;

Update:2025-07-22 09:38 IST

கோவை,

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் வைஷ்ணவி (வயது 20) நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர் துணை கமிஷனர் சுகாசினியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

நான் தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உறுப்பினராக இணைந்து மக்கள் பணி செய்தேன். சமூக வலைத்தளத்திலும் கட்சியின் கொள்கைகளை பரப்பினேன். அதன் பிறகு அந்த கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்தேன். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் என்னை பற்றி அவதூறாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்து வருகிறார்கள்.

அத்துடன் எனது புகைப்படத்தை மோசமாக சித்தரித்தும் பதிவேற்றம் செய்கிறார்கள். அதை அந்த கட்சியின் தலைவர் விஜய் கண்டிக்கவில்லை. எனவே என்னை பற்றி அவதூறு பரப்பி வரும் அந்த கட்சி நிர்வாகிகள் மீதும், விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் துணை கமிஷனர் கூறியதாக வைஷ்ணவி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்