உடையும் திமுக கூட்டணி? அண்ணாமலை ஆரூடம்

தி.மு.க., அகற்றப்பட வேண்டும் என்பதில் அனைவரும் தெள்ளத் தெளிவாக உள்ளோம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.;

Update:2025-07-22 17:10 IST

சென்னை,

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தினை ஒட்டி இன்று சிறப்பு சாமி தரிசனம் மேற்கொள்ள முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை காஞ்சிபுரம் வருகை புரிந்தார். சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.

அவருக்கு திருக்கோவில் சார்பாக காஞ்சி காமாட்சி அம்மன் புகைப்படமும் சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டது. மேலும் ஆடி மாதம் என்பதால் அதிகளவில் பக்தர்கள் கூடியிருந்த நிலையில் அனைவரிடம் செல்பி எடுத்தும் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தார். அதனை தொடர்ந்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை காஞ்சிபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நாட்டுக்கு பல சேவை செய்துள்ளார். அவர் நன்றாக இருக்கே வேண்டும்.

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சார்ந்த மகளிர் ஒருவர், ஆட்டோ ஓட்டுநரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டு உள்ளார். போலீசார் ஒரு தலை பட்சமாக இல்லாமல், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் யார் தவறு செய்தாரோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம், தி.மு.க., கூட்டணியில் உள்ளதால், ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பாஜகவில் புதிய நிர்வாகிகள் வரும் போது, மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் புது நிர்வாகிகள் வருகின்றனர்.

திமுக அகற்றப்படவேண்டும் என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் திமுக கீழே போக ஆரம்பித்திருக்கிறது. திமுக கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கிறது. 8 மாசம் இருக்கு. 2026 தேர்தல், திமுக வரலாற்றில் அவர்களுக்கு ஒரு மோசமான தேர்தலாக இருக்கும். பெண்கள் பாதுகாப்பு, வளர்ச்சி என்று எல்லாவற்றிலும் கோட்டைவிட்டுள்ளது திமுக.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்