தூத்துக்குடி: மனைவியை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் தகராறு செய்து வீட்டிலிருந்த கடப்பாரையால் தாக்கி கொலை செய்தார்.;

Update:2025-07-22 19:22 IST

கடந்த 2023-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி, மாவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆண்டி மகன் சண்முகம் (வயது 67) என்பவர் தனது மனைவி சின்னம்மாள்(55) என்பவரிடம் தகராறு செய்து வீட்டிலிருந்த கடப்பாரையால் தாக்கி கொலை செய்தார். இந்த வழக்கில் சண்முகத்தை மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று (22.7.2025) குற்றவாளி சண்முகத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3.000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய மாசார்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு மாரிச்சாமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்