மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் உள்ள பழையபேட்டை, பொருட்காட்சிதிடல் துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பின்வரும் துணைமின் நிலையங்களில் நாளை (23.7.2025, புதன்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:
திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணைமின் நிலையங்களில் நாளை (23.7.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதன்படி திருநெல்வேலி டவுன், மேல ரதவீதி மேல் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலி டவுன் SN ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தரர்தெரு, பாரதியார்தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழ ரதவீதி, போஸ் மார்க்கெட், A.P.மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்க்கெட், வ.உ.சி.தெரு, வையாபுரிநகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான்குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோட்டைகருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (23.7.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்தி குளம், முடவன் குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.