விருதுநகர்: இன்ஸ்டா காதலனை நம்பி 25 பவுன் நகையை இழந்த கல்லூரி மாணவி

நகையை திரும்ப தருமாறு கேட்டபோது கொடுக்க மறுத்ததுடன் காதலியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.;

Update:2025-08-03 07:24 IST

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவின் (வயது 22) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த மாணவியிடம் இருந்து பல தவணையாக 25 பவுன் நகையை விவின் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீடு கட்ட பணம் வேண்டும் என மாணவியிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார்.

தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் விவின் மீது அந்த மாணவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. நகையை திரும்ப தருமாறு கேட்டபோது அவர் கொடுக்க மறுத்து போனில் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி, ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் பாபு தலைமையில் போலீசார் நடவடிக்கை எடுத்து விவினை தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி 25 பவுன் நகையை மாணவி பறிகொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags:    

மேலும் செய்திகள்