தூத்துக்குடி: மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மாற்றுத்திறனாளிகள் சங்க தர்ணா போராட்டத்தில், சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி வாகனத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.;

Update:2025-07-30 13:50 IST

தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிகளை ஆர்எஸ்எஸ் தொடர்புடைய தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க கூடாது. சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி வாகனத்தை மீண்டும் இயக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இதில் துணைத் தலைவர் சாலமன்ராஜ், மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின்ராஜ், பொருளாளர் கிருஷ்ணகுமார், செயல்தலைவர் நம்புராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்