சென்னை விமான நிலையம்: நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.;
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது. தினமும், 50,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1-ல் செயல்பட்டு வருகிறது. டெர்மினல் 2-ல் தற்போது விமான நிலைய விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. டெர்மினல் 3-ல் சர்வதேச விமான நிலையம் வருகை பகுதியாகவும், டெர்மினல்-4 சர்வதேச புறப்பாடு பகுதியாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து, ஜூன் 30 ஆம் தேதி வரையிலான முதல் 6 மாதங்களில் விமான பயணிகள் எண்ணிக்கை 8.23 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தற்போது வரை இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளது.