டாக்டராகும் கனவு.. அதிக மதிப்பெண்.. மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு

மாணவி தனக்கு அரசு ஒதுக்கீட்டில் டாக்டருக்கு படிக்க மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மன உளைச்சலில் இருந்தார்.;

Update:2025-07-27 11:44 IST


காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு காமராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவரது மகள் 18 வயது இளம்பெண். அவர் சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவிட்டு, டாக்டருக்கு படிக்க நீட் தேர்வு எழுதி 502 மதிப்பெண் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மாணவி தனக்கு அரசு ஒதுக்கீட்டில் டாக்டருக்கு படிக்க மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மன உளைச்சலில் இருந்தார்.

இந்த நிலையில் மாணவி வீட்டில் தொழுகை செய்வதாக கூறிவிட்டு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற நிலையிலும் இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா கிடைக்காதோ என அச்சத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்