கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் நீலகிரி கப்பல் முதல் முறையாக சென்னை வருகை

இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள ஐஎன்.எஸ் நீலகிரி கப்பல் முதல் முறையாக சென்னைக்கு வந்துள்ளது;

Update:2025-07-17 11:41 IST

சென்னை,

இந்திய கடற்படையில் 135-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். 20 நீர்மூழ்கிகளும் கடற்படையில் உள்ளன. வரும் 2030-ம் ஆண்டில் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 160 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வரும் 2035-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் நாட்டின் கடற்படையில் ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்சீர் ஆகிய மூன்று போர் கப்பல்கள் இணைக்கப்பட்டது. மூன்று போர் கப்பல்களுமே உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதால், அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு, வரலாற்று சிறப்பு மிக்கதாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள ஐஎன்.எஸ் நீலகிரி கப்பல் முதல் முறையாக சென்னைக்கு வந்துள்ளது. சென்னை கடலோரபகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் இந்த கப்பல் 149 மீட்டர் நீளம் கொண்டது ஆகும்.6,670 டன் எடை கொண்ட இந்த கப்பல், அதி நவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகும். 

Tags:    

மேலும் செய்திகள்