தூத்துக்குடி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கடந்த 28 நாட்களில் 2,45,876 விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, சாத்தான்குளம், ஏரல், கயத்தார், ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் மடிப்பேடுகளை தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 12-ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சியில் 43, 45, 48 ஆகிய வார்டுகளுக்கு காமராஜ் கல்லூரி, காயல்பட்டிணம் நகராட்சியில் 11, 12 ஆகிய வார்டுகளுக்கு சிறுநயினார் பள்ளியில் வைத்தும், சாயர்புரம் பேரூராட்சியில் 8, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய வார்டுகளுக்கு எஸ்.வி.பி.எஸ்.மஹால் மெயின்ரோடு, சுப்பிரமணியபுரத்தில் வைத்தும், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் 10, 11, 12, 13, 14, 15, 16, 17 மற்றும் 18 ஆகிய வார்டுகளுக்கு சுப திருமண மண்டபத்தில் வைத்தும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் சிதம்பராபுரம் சமுதாய நல கூடத்தில் வைத்தும், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஆர்.என்.ஆர்.டி.ஏ.தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் வைத்தும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற உள்ளது.
13ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சியில் 49, 50, 51 மற்றும் 60 ஆகிய வார்டுகளுக்கு திருகுடும்பம் துவக்கப்பள்ளி, கால்டுவெல் காலனியில் வைத்தும், திருச்செந்தூர் நகராட்சியில் 24, 25, 26 ஆகிய வார்டுளுக்கு திருகுடும்பம் மேல்நிலைப் பள்ளியில் வைத்தும், தென்திருப்பேரை பேரூராட்சி பகுதியில் 7, 8, 9, 10, 11, 12 ஆகிய வார்டுகளில் தென்திருப்பேரை வார்டு எண் 6, சமுதாய நலக்கூடத்தில் வைத்தும், உடன்குடி பேரூராட்சி பகுதியில் 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ஆகிய வார்டுகளில் உடன்குடி பேரூராட்சி, வார்டு எண் 8 பஞ்சாயத்து திருமண மண்டபத்தில் வைத்தும், கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் பொன்னுசாமி நாடார் மணிமண்டபம், செட்டிக்குறிச்சியில் வைத்தும், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, புதியம்புத்தூரில் வைத்தும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற உள்ளது.
14-ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 52, 53, 54 ஆகிய வார்டுளுக்கு கே.டி.கே. உயர்நிலைப் பள்ளி, முத்தையாபுரத்தில் வைத்தும், கோவில்பட்டி நகராட்சியில் 1, 2, 16 ஆகிய வார்டுளுக்கு சாரதா மஹாலில் வைத்தும், வி.புதூர் பேரூராட்சி பகுதியில் 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய வார்டுகளில் கம்மாவார் திருமண மண்டபத்தில் வைத்தும், விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய வார்டுகளில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிழக்கு கார் தெருவில் வைத்தும், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் டி.டி.டி.ஏ. துவக்கப்பள்ளியில் வைத்தும், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் எஸ்.ஹெச். கட்டிடம், அம்மன்புரத்தில் வைத்தும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
பொதுமக்களின் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் நேரில் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பங்கள் மற்றும் மடிப்பேடு வழங்கி, 15 அரசு துறைகள் வாயிலாக வழங்கப்படும் 46 சேவைகள் குறித்தும், பொதுமக்களிடையே விளக்கி கூறினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 28 நாட்களில் 2,45,876 விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இன்றும் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.