’விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்கள் தெரியும்… அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேறும்..’ எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

எடப்பாடி பழனிசாமி வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை விவசாயிகளோடு கலந்துரையாடினார்.;

Update:2025-08-12 16:04 IST

சென்னை,

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தனியார் விடுதியில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை விவசாயிகளோடு கலந்துரையாடினார். பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். இதையடுத்து அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,

’அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவ்வப்போது விவசாயிகளை சந்தித்து பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தோம். தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்டினோம். குடிமராமத்து திட்டம் மூலம் 6 ஆயிரம் ஏரிகளையும், ஆயிரக்கணக்கான குளங்களையும் தூர் வாரினோம். அதிலிருந்து கிடைத்த வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு விலையில்லாமல் வழங்கினோம். விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்கினோம். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாகக் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டார்கள். அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த்தும் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

விளைநிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாகவும், அதற்கு உரிய இழப்பீடு வேண்டும் என்றும் கேட்டிருக்கிறீர்கள். அதிமுக அரசு இருக்கின்ற வரை, வன விலங்குகளால் பயிருக்கு இழப்பு, சேதம் ஏற்பட்டால் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. யானை போன்ற விலங்குகள் வயலில் புகுந்து சேதம் விளைவிப்பதுடன் விவசாயிகளை தாக்கி வருவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். யானை நடமாட்டத்தை தடுக்க மின் வேலி அமைப்பது, அகழி வெட்டுவது போன்ற பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டன. இப்போது அதன் நிலை என்ன என்று தெரியவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் எந்தெந்த பகுதியில் யானை நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்று கண்டறிந்து,. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் விலங்குகளால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்கு வழங்கப்படும், நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும்.

இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகமாக இருந்த்தால் விலை வீழ்ச்சி அடைந்து இங்குள்ள மா விவசாயிகள் பெரிய நஷ்ட்த்தை சந்தித்தனர். அவர்களுக்கு 1 ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், ஒரு கிலோவுக்கு 13 ரூபாய் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிமுக போராட்டமே நட்த்தியது. மாங்கூழ் தொழிற்சாலை அமைப்பது குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்த்தும் பரிசீலனை செய்யும்.

கிருஷ்ணகிரி பகுதியில் மலர் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றினோம். பல்வேறு மானியங்களை கொடுத்தோம். இப்போது அந்த மானியங்கள் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். இதுவும் ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்.

இங்கு உற்பத்தியாகும் மலர்களை பெங்களூருவில் விற்க வேண்டிய சூழல் இருந்தது. எனவே ஒசூரில் மலர்களை விற்பனை செய்யும் வகையில் சர்வதேச மலர் ஏல மையத்தை 20 கோடியில் கட்டினோம். அதை கடந்த ஆண்டுதான் இந்த அரசு திறந்துள்ளது. ஆனால், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த மலர் ஏல மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவோம்.

கொடியாளம் அணை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதையும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றித் தருவோம். விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை விற்க மத்திய அரசுடன் இணைந்து 20 கோடி ரூபாயில் 10 மாவட்டங்களில் திட்டம் கொண்டுவந்தோம். அதுவும் இந்த ஆட்சியில் கைவிடப்பட்டுள்ளது.

நான் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது பால் பண்ணைக்குச் சென்று பார்வையிட்டேன். ஒரே இடத்தில் 1,35,000 லிட்டர் பாலை உற்பத்தி செய்து பல்வேறு பகுதிகளுக்கு வழங்கி வந்தனர் அங்கு ஒரு பசு 65 லிட்டர் வரை பால் கொடுக்கிறது. அதையெல்லாம் கவனித்து நம் பகுதி விவசாயிகளுக்கு கலப்பின மாடுகளைக் கொடுப்பதற்கு பிரம்மாண்டமான கால்நடை பூங்கா அமைத்தோம். ஆடு, கோழி வளர்ப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் இத்திட்டத்தை கொண்டுவந்தோம். அதில் ஒரு பகுதியை நான் திறந்தேன். மற்ற பகுதிகளை நான் பலமுறை வலியுறுத்திய பிறகு கடந்த ஆண்டு திறந்துள்ளனர். ஆனால், போதிய வசதிகள்

எனக்கு விவசாயம்தான் பிரதான தொழில். விவசாயம் செய்வதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் எனக்குத் தெரியும். அவர்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதுதான் எங்கள் முக்கிய பணியாக இருக்கும்.,,’’ என்று உறுதி கொடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்