மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை (13.8.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.