சென்னை ஐகோர்ட்டில் சிறுமி தற்கொலை முயற்சி - அதிர்ச்சி சம்பவம்
சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
சென்னை நீலாங்கரையை சேர்ந்த தனது மகளான 15 வயது சிறுமியை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிறுமியை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீலாங்கரை போலீசுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, சிறுமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, அந்த சிறுமியை காப்பகத்தில் தங்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைக்கேட்டு மன உளைச்சல் அடைந்த சிறுமி, கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட வழக்கறிஞர்கள், போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.