தூய்மை பணியாளர்கள் போராட்டம்: முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி - ஈ.ஆர். ஈஸ்வரன் அறிக்கை

கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு பணிக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-14 15:38 IST

சென்னை,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தூய்மை பணியாளர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்ததை பல அரசியல் கட்சிகள் இதை அரசியலாக்க முயற்சித்த போதும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் முறைப்படி அமைச்சரவையை கூட்டி தூய்மை பணியாளர்கள் குடும்பங்களுடைய நிலையை மேம்படுத்த நல்ல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார். தூய்மை பணியாளர்களுடைய நலனில் தனக்கு அக்கறை இருக்கிறது என்பதை இன்றைய அறிவிப்புகள் மூலம் முதல்-அமைச்சர் உணர்த்தியிருக்கிறார்.

காலை உணவு, குடியிருப்புகள், காப்பீடுகள், கூடுதல் இழப்பீடுகள் போன்ற பல்வேறு நல்ல விஷயங்களை தமிழக அமைச்சரவையால் ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல்-அமைச்சரின் அறிவிப்புகள் மூலம் அவருடைய உணர்வுகளை புரிந்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

மேலும் சில கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்