ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - ரூ.10 கோடி வருவாய் இழப்பு

பலத்த காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.;

Update:2025-07-26 21:41 IST

ராமநாதபுரம்,

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 700 க்கு மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது. இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, கடலுக்கு செல்ல தடை காரணமாக பத்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்