முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நலம் விசாரிப்பு

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் உடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.;

Update:2025-07-21 17:47 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று நடைபயற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலை நடைபயிற்சியின் போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பரிசோதனைகளுக்காக கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அப்போலோ மருத்துவமனையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில், ''முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் உடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்றார்.

இந்தநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். தொலைபேசி மூலம் பேசிய ரஜினிகாந்த், முதல்-அமைச்சர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகரும் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சரை நலம் விசாரித்தார். உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அத்துடன் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடமும், முதல்-அமைச்சர் நலம் குறித்து விசாரித்தார் என்று மநீம கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்