ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

திருச்சி- ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-07-22 01:58 IST

திருச்சி,

மதுரை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சி- ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரெயில் மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும். மானாமதுரை- ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதே போல் ராமேசுவரம்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேசுவரம்- மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதால் வருகிற 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும். இதேபோல் ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி காத்ரா- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24-ந்தேதி திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும். புதுக்கோட்டை, சிவகங்கையில் கூடுதலாக நின்று செல்லும்.

ராமேசுவரம் -சார்லபள்ளி சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு பதிலாக 9 மணி 50 நிமிட நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு புறப்படும். திருச்சி -பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷனில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு விஜயமங்கலத்தில் நிறுத்தப்படும். பின்னர் அங்கிருந்து பாலக்காட்டிற்கு முன்பதிவில்லா ரெயிலாக புறப்பட்டு செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்