மதுரை, திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-08-04 21:50 IST

மதுரை,

மதுரை வண்டியூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் வண்டியூர், பி.கே.எம். நகர், சவுராஸ்ட்ராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின்நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயராமன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூரை அடுத்த 15வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 6-ந் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 15வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லேஅவுட், திருமுருகன்பூண்டி, விவேகானந்த கேந்தரா பகுதி, டி.டி.பி. மில் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

இந்த தகவலை அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்