கவின் கொலை வழக்கு: நெல்லையில் தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை

கவின் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-08-04 20:28 IST

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுடைய மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். தற்போது சொந்த ஊருக்கு வந்திருந்த கவின் கடந்த 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கவின் பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன்- கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகள் சுபாஷினியை காதலித்தார். இவர்களின் காதலை விரும்பாத சுபாஷினியின் தம்பி சுர்ஜித் இந்த கொலையை செய்துள்ளார். இதுதொடர்பாக சுர்ஜித், அவரது தந்தை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கவின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய பட்டியலின ஆணையம் இன்று நெல்லை வந்துள்ளது. நெல்லையில் 2 நாட்கள் முகாமிட்டு பட்டியலின ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்குவானா தலைமையிலான குழுவினர் வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடம், கவின் பெற்றோரிடம் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்