வேன் மோதி முதியவர் பலி - மக்கள் சாலை மறியல் போராட்டம்
முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் கழுத்தூர் பகுதியில் அண்ணாமலை என்கிற முதியவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது சாலையில் வந்துகொண்டிருந்த வேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவ்வட்டத்திலேயே வேப்பூர் பகுதியில் தான் அதிகளவு விபத்துக்கள் நடக்கின்றன. தொடர் விபத்துக்களை தடுக்க இந்த பகுதியில் ஒரு மேம்பாலம் வேண்டும் என்று ஒவ்வொறு முறை விபத்து நடக்கும் போதும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கைக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல முறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே இந்த சாலை விபத்திற்கு காரணம் என கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.