முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை; காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு
காவல் ஆய்வாளர் இளையராஜா காவல் நிலையத்தில் நைனாவுக்கு அதிகப்படியான மன உளைச்சலை கொடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அத்திப்பாக்கம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா என்பவர் மூன்று பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்று காலை தனது நிலத்தில் தற்கொலைக்கு செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா மற்றும் நான்கு நபர்களின் பெயரை எழுதிவைத்துள்ளார்.
திருநாவலூர் காவல் ஆய்வாளர் இளையராஜா காவல் நிலையத்தில் நைனாவுக்கு அதிகப்படியான மன உளைச்சலை கொடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. சிவில் வழக்கில் அத்துமீறி நடந்த இளையராஜாவின் செயலால் நைனா மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், திருநாவலூர் ஆய்வாளர் இளையராஜா மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.