பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது

இரவு 8.10 மணிக்கு புறப்பட்ட வேண்டிய ரெயில், 2 மணி நேரம் தாமதமாக 10.10 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-25 21:46 IST

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில், எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை செங்கோட்டையை வந்து சேரும். எழும்பூர் ரெயில் நிலையத்தில் இடம் இல்லாததால், இந்த ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன் பின்னர், புறப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக எழும்பூரில் நிறுத்தி வைக்கப்படும்.

அதன்படி, செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து காலிப்பெட்டிகளுடன் எழும்பூர் நோக்கி புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. முதற்கட்ட அறிக்கைகளின்படி, தண்டவாளங்களில் சக்கர பெட்டிகளை மறுசீரமைப்பு செய்யும் போது ஒரு ஆபரேட்டரின் மேற்பார்வை தவறால் இது நடந்ததாக ரெயில்வே வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.

தடம் புரண்ட ரெயிலை சக்கரத்தை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்து காரணமாக, இரவு 8.10 மணிக்கு புறப்பட்ட வேண்டிய ரெயில், 2 மணி நேரம் தாமதமாக 10.10 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்