சிகிச்சை, பரிசோதனைகள் நிறைவு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வீடு திரும்புகிறார்

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update:2025-07-26 04:00 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந்தேதி நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தலைசுற்றலுக்கான காரணம் தொடர்பாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் சிகிச்சையில் இருந்தபோதிலும், ஆஸ்பத்திரியில் இருந்தவாறே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டார்.

இதற்கிடையில், முதல்-அமைச்சருக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.முதல்-அமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், அவர் தனது வழக்கமான பணிகளை 2 நாட்களில் மேற்கொள்வார் என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

அனைத்து பரிசோதனைகளும், சிகிச்சைகளும் நிறைவடைந்த நிலையில் அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும், பூரண குணமடைந்துவிட்டார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாளை (ஞாயிற்றுகிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்