இரண்டாம் நாள் நடை பயணத்தை தொடங்கினார் அன்புமணி ராமதாஸ்

"உரிமை மீட்க தலைமுறை காக்க" என்ற தலைப்பில் 100 நாட்கள் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.;

Update:2025-07-26 19:14 IST

செங்கல்பட்டு,

தமிழக மக்கள் உரிமை மீட்பு நடை பயணத்தை நேற்று அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். நேற்று திருப்போரூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார். திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று இரண்டாவது நாள் நடை பயணத்தை தொடங்கினார். "உரிமை மீட்க தலைமுறை காக்க" என்ற தலைப்பில் 100 நாட்கள் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இரண்டாவது நாளான இன்று செங்கல்பட்டு தொகுதியில் நடை பயணத்தை தொடங்கினார்.

இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே துவங்கி, ராட்டினம் கிணறு பகுதி வரை செல்கிறார். இறுதியாக ராட்டினம் கிணறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, மேடையில் உரையாற்ற உள்ளார். முன்னதாக இந்த பயணத்திற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்