'தாய்மொழி பிடிக்கும் என்பதற்காக பிற மொழிகளை வெறுக்க கூடாது'- மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

அரசியல் சாசனப்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும்;

Update:2025-07-27 03:45 IST

ஆவடி,  

ஆவடி அடுத்த பருத்திப்பட்டு, விவேகானந்தா நகரில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. இதில் மராட்டிய மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கு என் தாய்மொழி பிடிக்கும் என்பதற்காக பிற மொழிகளை, பிற மதத்தினரை வெறுக்க கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் போதுதான் நாடு உயர்ந்த நிலைக்கு செல்லும். அரசு பள்ளிகளின் தரமும் உயர்த்தப்படவேண்டும். அதே நேரத்தில் தனியார் பள்ளியில் கூட தரத்தில் உயர்த்தப்பட்டாலும், கட்டணங்களும் ஏழை எளிய மக்களுக்கு எட்டக்கூடிய அளவில் இருக்கவேண்டும்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் வேந்தர்கள் நியமனம் குறித்து 2 விதமான தீர்ப்புகளை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. அதற்கான விளக்கத்தை கவர்னர் கேட்டுள்ளார். இது தொடர்பாக விரைவில் ஒரு தெளிவு வரும். அரசியல் சாசனப்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். மற்றவர்கள் அதிகாரத்துக்குள் நுழைய விரும்பக்கூடாது. வேந்தர்கள் நியமனம் என்பது கவர்னரின் முழுமையான அதிகாரத்துக்கு உட்பட்டதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்