கடலூர்: ஸ்ரீ முஷ்ணம் ஏரியில் மூழ்கி சிறுவன் பலி - மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் வட்டம், ஸ்ரீ வக்காரமாரி கிராமம், மேட்டுத் தெருவைச் சேர்ந்த செல்வன். அப்துல் ஆசிம் (வயது 12) என்ற சிறுவன் இன்று (26.07.2025) காலை சுமார் 10.30 மணியளவில் ஸ்ரீ வக்காரமாரி குன்னத்தேரி என்ற ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.