நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்? சீமான் பதில்
தனித்து போட்டி என்பதால், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்விலும், சீமான் அதிக கவனம் செலுத்துகிறார்.;
சென்னை,
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்ற அறிவிப்பை பகிரங்கமாக அறிவித்து தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய பயணத்தில் வேகமாக களம் காண்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் சீமானும் களத்தில் குதிக்கிறார் என கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது அக்கட்சியினருக்கு ஊக்கத்தை கொடுத்து இருக்கிறது. இந்தநிலையில் செம்மணி மனித புதைக்குழி உள்பட மறைக்கப்பட்ட அனைத்து புதைக்குழிகள் குறித்து பன்னாட்டு சுதந்திர விசாரணை நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவரிடம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'விரைவில் மாநாடு நடத்தி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறேன்' என்றார்.