பைக் பெட்ரோல் டேங்கில் மனைவிகளை அமர வைத்து பயணம் செய்த வாலிபர்கள்- வைரலாகும் வீடியோ

திருத்தணி வாலிபர்கள் இருவரும் ரீல்ஸ் மோகத்தால் தங்களது மனைவிகளை பெட்ரோல் டேங்கில் அமர வைத்து ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர்.;

Update:2025-07-26 02:15 IST

திருத்தணி,

இன்றைய இளம் வயதினர் ரீல்ஸ் மோகத்தால் தாங்கள் செல்லும் இடங்கள், செய்யும் சாகசங்கள் போன்றவற்றை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுகின்றனர். இதில் கிடைக்கும் வரவேற்பிற்காக ஆபத்தான செயல்களிலும் பலர் ஈடுபடுகின்றனர். இந்த செயல்கள் சில நேரங்களில் அவர்களின் உயிருக்கே உலை வைத்து விடுகிறது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கின்ற வாலிபர்கள் இருவர் தங்கள் மனைவிகளை மோட்டார் சைக்கிளின் முன்பக்க பெட்ரோல் டேங்கின் மீது அமர வைத்து கொண்டு திருத்தணி- அரக்கோணம் புறவழிச் சாலையில் அதிவேகமாக சென்று 'ரீல்ஸ்' வீடியோ எடுத்துள்ளனர். இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்