பிரதமர் மோடியின் வருகை தமிழ்நாட்டுக்கு பெருமை - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பிரதமர் பங்கேற்க வருவது தமிழ்நாட்டுக்கு பெருமை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.;

Update:2025-07-26 03:14 IST

கோப்புப்படம் 

சென்னையில் நிதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தான் அலையாத்தி காடுகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கங்கை கொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழன் உருவாக்கிய தலைநகர். அவருடைய காலத்தில் சோழகங்கம் என்று அழைக்கப்பட்ட ஏரி இப்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. ஏறத்தாழ 700 ஏக்கர் பரப்பளவில் அது இருக்கிறது. 1,374 ஏக்கர் பாசனப் பரப்பு இங்கு நடக்கிறது.

இந்த பாசன பகுதிகளுக்கும், விவசாயிகளுக்கும் பயன் தரும் வகையிலும், ஏரியை சுற்றுலா மையமாக உருவாக்கவும் ரூ.19.25 கோடி நிதியை ஒதுக்கியிருக்கிறார்கள். அதில் ஏறத்தாழ ரூ.12 கோடி ஏரியை உபரி நீர் வடிகால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள செலவிடப்பட உள்ளது.

ராஜேந்திர சோழனின் கடல் கடந்த படையெடுப்பின் ஆயிரமாவது ஆண்டு விழாவை குறிக்கும் நிகழ்வுக்கு பிரதமர் மோடி இங்கு வர உள்ளார். அது தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்