ரூ.400 கோடிக்கு இரிடியம் விற்பனை? - 4 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்டது உண்மையான இரிடியமா? அல்லது போலி இரிடியமா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நெய்வேலியில் சிலர் இரிடியம் விற்பனை செய்ய விலை பேசியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதிக்கு மாறுவேடத்தில் சென்று, அவர்களிடம் இரிடியம் வாங்குவது போல் பேரம் பேசினர்.
அப்போது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள், மாறுவேடத்தில் வந்தது போலீசார் என தெரியாமல் அவர்களிடம் ரூ.400 கோடிக்கு இரிடியம் விற்க முற்பட்டுள்ளனர். இதையடுத்து இரிடியம் விற்பனையில் ஈடுபட முயன்ற 4 பேரையும் போலீசார் கையும் களவுமாக கைதுசெய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இரிடியத்தை போலீசார் பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்யப்பட்டது உண்மையான இரிடியமா?, அல்லது போலி இரிடியமா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.