பீகாரில் டிரம்புக்கு இருப்பிட சான்று கேட்டு மனு - அதிகாரிகள் அதிர்ச்சி

இணைய வழியில் டிரம்ப் பெயர், புகைப்படத்தை பதிவேற்றம் செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-08-07 13:43 IST

சமஸ்திபூர்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெயருக்கு இருப்பிட சான்றிதழ் கேட்டு பீகார் மாநிலத்தில் மர்ம நபர் ஒருவர் மனு செய்து உள்ளார்.டிரம்ப், பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தின் ஹசன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், அவரது பெற்றோர் பிரடெரிக் கிறைஸ்ட் டிரம்ப், மேரி ஆன் மெக்லியோட் என அமெரிக்க ஜனாதிபதியின் உண்மையான பெற்றோரின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த 29-ந்தேதி ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்ட இந்த மனுவை கடந்த 4-ந்தேதி அதிகாரிகள் பார்த்து நிராகரித்தனர். அதேநேரம் இந்த மனுவை அனுப்பியவரை கண்டுபிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசாரை வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இவ்வாறு வருவாய்த்துறையினரிடம் குறும்பு செய்ய நினைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிராக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த விவகாரம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்