மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசியில் மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.;
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் உள்ள மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (12.8.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதனால் தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன்நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் கீழப்புலியூர், தென்காசி ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.