கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வராக லியோ டேவிட் நியமனம்
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வர், முன்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டிருந்தார்.;
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக லியோ டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக பணியாற்றி வந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் அங்கிருந்து கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக மாற்றப்பட்டுள்ளார்.