தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பலியாகும் மயில்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடியில் ஒரு கல்லூரி அருகே உள்ள ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரில் காகங்களும், மயில்களும் வந்து அமர முற்படும்போது, டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி இறக்க நேரிடுகின்றன.;

Update:2025-08-05 13:42 IST

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் மரங்கள் அதிகமாக இருப்பதினால் அதில் பறவைகள் அதிகமாக தங்குகின்றது. இதில் காகங்களும், மயில்களும் தங்கி இருக்கின்றன. கல்லூரி அருகே கமாக் பள்ளி ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த டிரான்ஸ்பார்மரில் காகங்களும், மயில்களும் வந்து அமர முற்படும்போது, டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி இறக்க நேரிடுகின்றன. இதனை தடுக்க தூத்துக்குடி மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்