பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஓ. பன்னீர்செல்வம் பலிகடா ஆகி விட்டார் - செல்வப்பெருந்தகை

‘இந்தியா’ கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.;

Update:2025-07-29 00:42 IST

கோப்புப்படம் 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜேந்திர சோழனுக்கு விழா எடுத்து இருக்கிறோம் என பிரதமர் மோடி வட மாநிலத்தில் பேச வேண்டும். 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.3 லட்சம் கோடி கொடுத்து இருப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். உள்துறை மந்திரி அமித்ஷா ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் கோடி என்று சொல்கிறார். மத்திய மந்திரி எல்.முருகன் ரூ.12 லட்சம் கோடி என்று சொல்கிறார். ஒவ்வொரு நபரும் கோடிக்கணக்கில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக மாற்றி மாற்றி பேசுகின்றனர். இதில் யார் சொல்வது உண்மை?.

தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பாக கூறி வருகிறார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதுதான் அதிக நிதி தமிழகத்துக்கு கொடுத்தது. திருமாவளவன், எம்.பி. என்ற அடிப்படையில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை திருப்புமுனை என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது அறியாமை.

'இந்தியா' கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது. ஒரு செங்கலை கூட உருவ முடியாது. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் செய்ததற்கு வழிகாட்டியது யார்? பின்னர் அ.தி.மு.க.வை 4 ஆக உடைத்தனர். இப்போது அவரை முழுமையாக கைவிட்டுவிட்டனர். இதுதான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் சித்தாந்தம். அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் 'பலிகடா' ஆகிவிட்டார். அவரது அரசியல் வாழ்க்கையை முடித்துவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்