நெல்லையில் தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி விற்பனை: கலெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார்

நெலலையில் 75 வயதைக் கடந்தும் நெசவுத் தொழில் செய்து வரும் 3 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மாவட்ட கலெக்டர் சுகுமார் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.;

Update:2025-08-07 14:05 IST

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று 11-வது தேசிய கைத்தறி தினத்தினையொட்டி நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி விற்பனையை மாவட்ட கலெக்டர் சுகுமார், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் அவர், இந்த நிகழ்ச்சியில் 75 வயதைக் கடந்தும் நெசவுத் தொழில் செய்து வரும் 3 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து நெசவாளர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மானியம் மற்றும் வட்டி மானியத்துடன் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் 7 உறுப்பினர்களுக்கு கடன் தொகையாக ரூ.6 லட்சமும், நெசவாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 11 நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளும் மற்றும் கைத்தறி குழுமத் திட்டத்தின் கீழ் 5 நெசவாளர்களுக்கு தறி உபகரணங்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி சரக கைத்தறி உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ், கைத்தறி அலுவலர் செண்பகராஜ் மற்றும் கைத்தறி துறை அலுவலகப் பணியாளர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்