தொகுதி வாரியாக நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்
பா.ஜ.க. முதல் மண்டல மாநாடு நெல்லையில் 17-ந்தேதி நடத்தப்படுகிறது;
நெல்லை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுதொடர்பாக கூறியதாவது,
2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பா.ஜ.க. சார்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. முதல் மண்டல மாநாடு நெல்லையில் 17-ந்தேதி நடத்தப்படுகிறது.இதில் நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.இதற்காக தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பூத் கமிட்டியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில் நேற்று அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி தொகுதிகளில் ஆய்வு செய்தேன். தொடர்ந்து நாளை முதல் மற்ற தொகுதிகளில் ஆய்வு பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.பா.ஜ.க.வில் 1 பூத்துக்கு 12 கமிட்டி பொறுப்பாளர்கள் வீதம் நெல்லை மண்டலத்தில் 9 ஆயிரம் பூத்களில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த பணிகள் 70 சதவீதம் முடிவடைந்து விட்டது. வருகிற 17-ந்தேதிக்குள் பணிகள் முழுமையாக முடிந்து எப்படியும் 1 லட்சம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் இந்த மண்டல மாநாட்டில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பங்கேற்க செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அது தொடர்பாக முழுமையான முடிவுகள் எடுக்கப்படவில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.